×

சென்னை, எழும்பூரில் உள்ள காவல் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், காவல் ஆணையாளர் ஆய்வு

சென்னை: எழும்பூரில் உள்ள காவல் மருத்துவமனையை மாண்புமிகு  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், காவல் ஆணையாளருடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை, எழும்பூரில் உள்ள காவல் மருத்துவமனையானது கடந்த 01.04.1928 அன்று மருந்தகமாக துவங்கப்பட்டது. பின்னர் 1963ம் ஆண்டு 15 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

தற்போது Fully automated laboratory with i) Fully automated haematology analyser, ii) Fully automated bio-Chemistry analyser, iii) electrolyte analyser, iv) ESR analyser having capacity of 640 Tests per hour, 2.Ultra sonogram, 3.Channel ECG Machine, 4.Ventilator, 5.Infusion Pump, 6.Multi Para monitor, 7.Digital X-ray Unit, 8.CT scan, 9.Anaesthesia Machine, 10.Oxygen Generator, Diagnostic ENT Endoscopy, Advanced Four channel Coagulation analyser, Colposcopy, etc., போன்ற நவீன தானியங்கி மருத்துவ உபகரணங்களுடன் கூடிய, 50 படுக்கை வசதி கொண்ட நவீன மருத்துவமனையாக 2018-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு 1 தலைமை மருத்துவர்,  10 மருத்துவர்கள்,                        12 செவிலியர்கள், மற்றும் தொழில்நுட்பட பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு நல்ல முறையில் இயங்கி வருகிறது.

காவலர் மருத்துவமனையில் காவல் அதிகாரிகள் ஆளினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு முழு உடல் பரிசோதனையும் (Master Health Check Up) மேற்கொள்ளப்படுகிறது. தினந்தோறும் சராசரியாக 600 காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் காவலர் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிசிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இன்று (27.10.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எழும்பூர் காவலர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு பணியிலிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களிடம் கலந்துரையாடி, காவலர் மருத்துவமனையை மேம்படுத்த தேவையான உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் உடனிருந்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநர் மருத்துவர் ஹரிசுந்தரி, காவல் இணை ஆணையாளர் தலைமையிடம் சாமூண்டிஸ்வரி, இ.கா.ப (தலைமையிடம்) காவல் துணை ஆணையாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார், (தலைமையிடம்), எழும்பூர் காவல் மருத்துவமனை தலைமை மருத்துவர் K.V.மது பிரசாத், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags : Commissioner ,People's Welfare Department ,Chennai, Elmampur , Police Hospital, Minister of Public Welfare, Commissioner of Police,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...