×

வேதிப்பொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கிய முபின்: கோவை கார் வெடிப்பு சம்பவ வழக்கில் காவல்துறையினர் தகவல்

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவ வழக்கில் முபின் வீட்டிலிருந்து 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட்டை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். முபின் வீட்டில்  76. 5 கிலோ ரசாயனம் கைப்பற்றப்பற்றிய தனிப்படை போலீசார், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் இருந்து முபின் இந்த வேதிப்பொருட்களை வாங்கியிருக்கிறார் என்று  தகவல் தெரிவித்து இருக்கின்றனர். கடந்த 23ஆம் தேதி அன்று அதிகாலையில் கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பாக திடீரென்று கார் வெடித்து சிதறியது.

இந்த சம்பவத்தில் காரில் இருந்த வாலிபர் பலியானார். போலீசாரின் விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த முபின்(29) என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா,  முகமது ரியாஸ், முகமது அசாருதீன், பரோஸ் இஸ்மாயில்,  முஹம்மது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஆறாவது நபராக அப்சர்கான் என்பவரை இரவோடு இரவாக கைது செய்துள்ளனர் தனிப்படை போலீசார்.  

இந்த அப்சர் கான், முபின் உறவினர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை நடத்திய போலீசார் முபின் வீட்டில் இருந்து 76.5 கிலோ ரசாயன பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், குறைந்த வெடிக்கும் தன்மை கொண்ட வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் வீட்டில் இருந்தது. இந்த பொருட்களை ஆய்விற்காக தடயவியல் குழுவினர் எடுத்துச் சென்றுள்ளார்கள்.

முடிவு வந்ததும் இந்த ரசாயனப் பொருட்கள் எத்தகைய வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படுகிறது என்பது குறித்து தெரியவரும் என்று தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் , வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் எப்படி கிடைத்தது? என்பது தொடர்பாகவும் அப்சர்கானிடம் விசாரணை நடந்து வருகின்றது. ஒரு சில பொருட்களை அவர் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதள போன்ற இணையதளங்கள் மூலம் பர்ச்சேஸ் செய்து இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

Tags : Mubin ,Amazon ,Flipkart , Mubin bought chemicals from Amazon and Flipkart: Police informed in Coimbatore car explosion case
× RELATED கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் 4...