×

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எம்எல்சி தேர்தல் வெற்றியை ஜெகன்மோகனுக்கு பரிசாக வழங்க வேண்டும்-திருப்பதியில் முன்னாள் அமைச்சர் பேச்சு

திருப்பதி :   எம்எல்சி தேர்தல் வெற்றியை ஜெகன்மோகனுக்கு பரிசாக வழங்க வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அனில் குமார் பேசினார்.திருப்பதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கட்சித் தலைவரும், சந்திரகிரி எம்எல்ஏவுமான செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி தலைமையில், எம்.எல்.சி., தேர்தலுக்கு கட்சித் தலைவர்களை தயார்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் அனில்குமார் பேசுகையில், சந்திரகிரி எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி ஆகியோர் பட்டதாரி எம்எல்சி வேட்பாளராக ஷியாம்பிரசாத் ரெட்டியையும், ஆசிரியர் எம்எல்சி வேட்பாளராக சந்திரசேகர் ரெட்டியையும் வெற்றி பெறச்  இளைஞர்கள்  பாடுபட வேண்டும். இந்தத் தேர்தல்கள் பொதுத் தேர்தலிலிருந்து வேறுபட்டவை. இருப்பினும், கட்சித் தொண்டர்களும், தலைவர்களும் அலட்சியமாக இருக்காமல், வியூகமாகச் செயல்பட வேண்டும். இதற்கு புதிய வாக்காளர்கள் பதிவு செய்யும் பணியை முதலில் முடிக்க வேண்டும். இதனால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும்.  

மேலும், வாக்காளர் பதிவுக்கு நவம்பர் 7ம் தேதி கடைசி நாள் என்பதால் புதிய வாக்காளர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும். ஜாதி, மதம், வகுப்பு, பகுதிகளுக்கு அப்பாற்பட்டு பணியாற்றும் ஷியாம்பிரசாத் மற்றும் சந்திரசேகர் ரெட்டி ஆகியோரை சட்டப் பேரவைக்கு அனுப்பினால், படித்தவர்களுக்கு நீதி கிடைக்கும். சாமானிய மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்புள்ளது.  எம்எல் சி தேர்தல் வெற்றியை ஜெகன்மோகனுக்கு பரிசாக வழங்க வேண்டும். இந்த தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியமல்ல மிகப் பெரும்பான்மையான வெற்றி  அடைவதை நோக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பேசினார்.

Tags : YSR Congress ,MLC ,Jhaganmokan ,Tirupathi , Tirupati: YSR Congress leaders want Jaganmohan to be gifted with MLC election victory
× RELATED பெண் மேயர் ஒய்.எஸ்.ஆர்.காங். கட்சியில்...