×

இந்தியாவில் சில கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: முதலில் கமலா ஹாரிஸ், இப்போது ரிஷி சுனக் என ப.சிதம்பரம் டுவீட்

சென்னை: இந்தியாவில் சில கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: முதலில் கமலா ஹாரிஸ், இப்போது ரிஷி சுனக் என ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அந்நாட்டின் பிரதமர் ஆக சற்று முன் போட்டியின்றி தேர்வானார். நாடாளுமன்ற முன்னவர் பென்னி மார்டாண்ட் போட்டியில் இருந்து விலகியதால் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரானார். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுனாக் விரைவில் பிரதமராக பதவியேற்பார். இங்கிலாந்து நாட்டு மன்னர் 3-ம் சார்லஸ் ரிஷி சுனாக்கை பிரதமராக நியமனம் செய்தவுடன் அவர் பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இந்தியாவிற்கு வெளியே, அதுவும் இந்தியாவை பல ஆண்டுகள் தங்கள் ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்தி வைத்திருந்த இங்கிலாந்து அரசாங்கத்தில் பிரதமர் ஆக தேர்வானது குறித்து நமது நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ரிஷி சுனக் பிரதமராக தேர்வானது குறித்து ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.முதலில் கமலா ஹாரிஸ், இப்போது ரிஷி சுனக் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்கள் தங்கள் நாடுகளின் பெரும்பான்மை அல்லாத குடிமக்களை அரசாங்கத்தில் உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவும் பெரும்பான்மை வாதத்தை கடைப்பிடிக்கும் கட்சிகளும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது என்று பதிவிட்டார். அதேபோல, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா கூறுகையில் இந்தியா மிகவும் சகிப்புத்தன்மையுடனும், அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்ளும் நாடாக இருக்கட்டும் என்று கூறினார். இதன் மூலம், உலகில் மிகவும் அரிதான ஒன்றை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்தியர்கள் ரிஷி சுனக்கின் இந்த ஏற்றத்தை கொண்டாடும் அதே வேளையில் நாம் நேர்மையாக ஒரு கேள்வியை கேட்போம், இது போன்று இங்கே இந்தியாவில் நடக்குமா என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags : India ,Kamala Harris ,Rishi Sunak ,P. Chidambaram , Some parties in India need to learn a lesson: First Kamala Harris, now Rishi Sunak, P Chidambaram tweets
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...