×

மீன்பிடிக்க சென்றவர்கள் திரும்பவில்லை: குமரி மீனவர்கள் 2 பேர் பஹ்ரைனில் மாயம்

நாகர்கோவில்: குமரி மாவட்டம் கடியப்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சகாய செல்சோ(37), ஆண்டனி வின்சென்ட் (33). இரு மீனவர்களும் பஹ்ரைன் நாட்டில்,  தராக் மாஜித் என்பவர் படகில் மீன்பிடிப்பதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.  கடந்த 17ம் தேதி பஹ்ரைன் நாட்டின் மொராக் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்கு ஆழ் கடலுக்கு சென்றனர். மூன்று நாட்களில் கரை திரும்ப வேண்டும். அந்த வகையில் கடந்த 19ம் தேதியே இவர்கள் கரைதிரும்பியிருக்க வேண்டும். ஆனால் 8 நாட்களாகியும் கரை திரும்பவில்லை.

இது தொடர்பாக தெற்காசிய மீனவ தோழமை பொதுசெயலாளர் சர்ச்சில் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ‘மாயமான மீனவர்களை ஒரு வாரம்  கண்டுபிடிக்க இயலாதது மீனவர்கள் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே மாயமான இரண்டு மீனவர்களை உடனடியாக கண்டுபிடித்து தர ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பஹ்ரைன் அரசை வலியுறுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Bahrain , Went fishing, did not return, Kumari fisherman, 2 persons, Bahrain, Mayam
× RELATED பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு 9...