×

பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான 138 தமிழ் பாடப்புத்தகங்களை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான 138 தமிழ் பாடப்புத்தகங்களை வழங்கினார் இன்று (15.03.2024) தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு வரையிலான 138 தமிழ் பாடப்புத்தகங்களை வழங்கினார்.

இப்புத்தகங்களை மாநிலங்களவை உறுப்பினர் திரு. எம்.எம். அப்துல்லா அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் ஆர். கஜலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் இணை இயக்குநர் திரு. சங்கர சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post பஹ்ரைன் வாழ் தமிழ் மாணவர்களுக்கு 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான 138 தமிழ் பாடப்புத்தகங்களை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.

Tags : Minister Anbil Mahes ,Chennai ,Chief Minister ,Tamil Nadu ,K. ,Stalin ,Minister ,Anbil Mahes ,Bahrain ,Tamil Nadu Textbook and Pedagogical Works Association ,
× RELATED தமிழ்நாட்டில் தள்ளிப்போகிறதா...