தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட்டம்: இறுதிகட்ட ஷாப்பிங்கில் புத்தாடைகள், பட்டாசுகளை ஆர்வத்துடன் வாங்க குவிந்த மக்கள்

மதுரை: தீபாவளி நாளை கொண்டாடுபடுவதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் விற்பனை சூடுபிடித்திருக்கிறது. இறுதிகட்ட விற்பனையில் தற்போது பொதுமக்கள் ஈடுப்பட்டிருக்கின்றனர். தீபாவளி திருநாள் நாளை உலகமுழுவதும் கொண்டாடபடும் நிலையில் மதுரையை பொறுத்தவரை மதுரையில் உள்ள மாசி வீதியில் மக்கள் தற்போது அலைமோதி கொண்டிருக்கின்றனர். குறிப்பாக  தீபாவளிக்கு சிலமணி நேரங்கள் உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அலைகடலென  இறுதிகட்ட கொள்முதலுக்கு தற்போது வந்துள்ளனர்.

பொதுவாக இந்த மாசி வீதி என்பது தமிழகத்தினுடைய பிரபலமான வீதி என்றும் இந்த வீதி தான் மதுரையின் பிரதான பகுதியாக கூறப்படும். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இல்லங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்திருகின்றனர். கடந்த இரண்டு மூன்று நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் மிதமான சூழ்நிலை நிலவுவதால் அனைத்து தரப்பு மக்களும் மாசி வீதியில் வெள்ளம் போல குவிந்துள்ளனர். இதுபோன்ற மக்கள்கள் அதிகமாக வரக்கூடிய சூழலில் பாதுகப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக மதுரை மாநகராட்சி நிர்வாகம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கின்றது. தீபாவளிக்கு முதல் நாள் என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்திருக்கின்றனர். புதுக்கோட்டை கீழராஜவீதியில் வர்த்தக வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. வர்த்தக வணிக நிறுவனங்களை தவிர தீபாவளி பண்டிகையை மட்டும் நம்பி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் தங்களது கடைகளை அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக நாளைய தினம் தீபாவளி கொண்டாடபட உள்ளதால் இறுதிகட்ட விற்பனையில் வியாபாரிகளும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா தொற்றால் தீபாவளி பண்டிகை கலையிழந்து காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மகிழ்ச்சி பொங்க தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயாரன நிலையில் உள்ளனர். பொதுமக்களிம் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து வருவதால் காவல் துறையினர் பாதுகப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய கிராமபகுதி மக்கள் ஆடை முதல் ஆபரணம் வரை அனைத்து விதமான பொருட்களை வாங்க மக்கள் குவிந்துள்ளனர். அதைப்போல் சாலையோர வியாபாரிகளுக்கும் வியாபாரம் அளிக்க வேண்டும் என்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். மேலும் காவல்துறையினர் தொடர்ச்சியாக பாதுகப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: