மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் சாக்கரி

குவாதலஜாரா: மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி தகுதி பெற்றார். காலிறுதியில் ரஷ்யாவின் வெரோனிகா குதெர்மதோவாவுடன் (25 வயது, 12வது ரேங்க்) நேற்று மோதிய சாக்கரி (27 வயது, 6வது ரேங்க்) 6-1, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 35 நிமிடம் போராடி வென்றார். இந்த வெற்றியின் மூலம் ஆண்டு இறுதி டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரில் விளையாடவும் சாக்கரி தகுதி பெற்றார். செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா, அமெரிக்க வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா, விக்டோரியா அசரெங்கா (பெலாரஸ்) ஆகியோரும் மெக்சிகோ ஓபன் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories: