×

துண்டு சீட்டு வீசிய சிறுவன் படுகொலை: காதல் கடிதம் என தவறாக நினைத்து விபரீதம்

பாட்னா: பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் உத்வந்த் நகரை சேர்ந்த 5ம் வகுப்பு பள்ளிச் சிறுவன் கடந்த 13ம் தேதி மாயமான நிலையில், கடந்த 17ம் தேதி அப்பகுதியில் ரயில் தண்டவாளத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு கிடந்தான். அவனது சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கொலையான மாணவனின் சகோதரி கடந்த 13ம் தேதி வகுப்பறையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த மாணவன் தன் சகோதரியை நோக்கி தேர்வு துண்டுச்சீட்டு ஒன்றை வீசி உள்ளார். அந்த சீட்டு, வேறொரு மாணவி மீது விழுந்தது. அதை காதல் கடிதம் என தவறாக எண்ணிய மாணவி, அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கூறி உள்ளார்.

இதைத் தொடர்ந்து மாணவியின் சகோதரர்கள், 5ம் வகுப்பு மாணவனை அடித்து உதைத்து கடத்திச் சென்றனர். இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் கூறிய நிலையில், அவனை கடத்தியவர்கள் மாணவனை வெட்டிப் படுகொலை செய்து, உடலை தண்டவாளத்தில் வீசியதாக போலீசார் கூறி உள்ளனர். இதுதொடர்பாக, மாணவனை கடத்திய மாணவியின் சகோதரர்களான 4 சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Lottery , Lottery Boy Massacre: Mistaken as a Love Letter Tragedy