காந்தாரா ரிஷப் ஷெட்டியின் பான் இந்தியா படம்

ஐதராபாத்: காந்தாரா படத்தின் ஹீரோவும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டியின் அடுத்த படத்தை அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, காந்தாரா என்ற கன்னட படத்தை இயக்கி, நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபீசில் பெரும் பாய்ச்சலாக வெற்றி பெற்றுள்ளது. வெறும் ரூ.10 கோடியில் உருவான படம் வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து இந்த படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டுள்ளனர். தெலுங்கில் இந்த படத்தை அல்லு அர்ஜுனின் அப்பாவும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் வாங்கினார். அவர்தான் படத்தை வெளியிட்டார்.

அவருக்கு பெரும் லாபம் கிடைத்திருக்கிறது. இதையடுத்து தனது கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் ரிஷப் ஷெட்டியை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அவர் அடுத்து இயக்கி, நடிக்கும் படத்தை அல்லு அரவிந்த் தயாரிக்கிறார். இது பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: