×

சிந்தியா பாதுகாப்பில் குளறுபடி: 14 போலீசார் சஸ்பெண்ட்

குவாலியர்: மத்திய பிரதேச மாநிலம் பாஜக ராஜ்ய சபா எம்பி ஜோதிராதித்யா சிந்தியா, போபால், குவாலியர் போன்ற இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது பாதுகாப்புக்கு பின் சென்ற போலீசார், சிந்தியா வாகனத்திற்கு பாதுகாப்பாக செல்வதற்குப் பதிலாக, அதே தோற்றத்தில் இருந்த வேறு வாகனத்தை பின்தொடர்ந்து சென்றுவிட்டனர். இதனால் சிந்தியா பாதுகாப்பு போலீசார் இல்லாமலே குவாலியரை சென்றடைந்தார். போலீசாரின் இந்த அலட்சியத்தால், உடனடியாக அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர் உட்பட 14 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்….

The post சிந்தியா பாதுகாப்பில் குளறுபடி: 14 போலீசார் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Scindia ,Gwalior ,Madhya ,Pradesh ,BJP ,Rajya Sabha ,Jyotiraditya Scindia ,Bhopal ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...