×

தொடர்மழையால் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து வினாடிக்கு 28,000 கனஅடி நீர் திறப்பு

தருமபுரி : தொடர்மழையால் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் வினாடிக்கு 28,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தளி, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சின்னாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், வினாடிக்கு 4,500 கனஅடியாக உபரி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தளி, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில்  பெய்த கனமழை காரணமாக அதன் சுற்று பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பியது. இதில் சில ஏரிகள் நீர்வரத்து அதிகரிப்பால் உடைப்பு ஏற்பட்டதால் சின்னாறு அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சின்னாறு அணைக்கு நீர்வரத்து நேற்று இரவு திடீரென வினாடிக்கு 28,000 கனடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் மதகுகள் சட்டரை தாண்டி முழு கொள்ளளவை எட்டியதை கவனித்த பொதுப்பணித்துறையினர் உடனே வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். பின்னர், அணையின் பாதுகாப்பு கருது ஆற்றில் உபரிநீர் 28,000 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. இதனால், சின்னாற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாலைக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பாலக்காடு, தேன்கனிக்கோட்டை சாலையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. 


Tags : Panchappalli Chinnaram dam , Rainfall, Panchapalli, Chinnar, Dam, Water, Opening
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு