×

கேம்பர் அதிரடியில் அயர்லாந்து அசத்தல்

உலக கோப்பை டி20 முதல் சுற்று பி பிரிவில் நேற்று நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்தது. தொடக்க வீரர் மைக்கேல் ஜோன்ஸ் 86 ரன் (55 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். கேப்டன் பெர்ரிங்டன் 37, மேத்யூ கிராஸ் 28, லீஸ்க் 17* ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய அயர்லாந்து 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஸ்டர்லிங் 8, கேப்டன் பால்பிர்னி 14, டக்கர் 20, டெக்டர் 14 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அயர்லாந்து 9.3 ஓவரில் 61 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், கர்டிஸ் கேம்பர் - ஜார்ஜ் டாக்ரெல் ஜோடி அதிரடியாக விளையாடி 5வது விக்கெட்டு ஆட்டமிழக்காமல் 119 ரன் சேர்த்து வெற்றியை வசப்படுத்தியது. கேம்பர் 72* ரன் (32 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), டாக்ரெல் 39* ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். கேம்பர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


Tags : Ireland , Ireland is fantastic in camper action
× RELATED அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன்...