×

உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கவேண்டும்: அமைச்சர் சா.மு.நாசர் வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்டம் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் திருவேற்காட்டில் மாவட்ட அவைத்  தலைவர் நடுகுத்தகை ம.ராஜி தலைமையில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, நடுக்குத்தகை கே.ஜெ.ரமேஷ், மாநில மாணவரணி இணைச் செயலாளர்  சி.ஜெரால்டு, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயக்குமார், மாவட்ட நிர்வாகிகள் வி.ஜெ.சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், காயத்ரி தர், தொழுவூர் பா.நரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், ஜி.ராஜேந்திரன், கு.விமல்வர்ஷன், எம்.முத்தமிழ்செல்வன், வி.குமார்,ஜெ.மகாதேவன், காஞ்சனா சுதாகர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற தலைவரும் நகர செயலாளருமான என்.இ.கே.மூர்த்தி வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டுஆலோசனை வழங்கி சிறப்புரையற்றினார். பின்னர் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். திமுக தலைவராக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். பொதுக்குழு தீர்மானங்கள் குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், இளைஞரணியில் தீவிர உறுப்பினர்கள் சேர்க்கவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

கூட்டத்தில், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் சா.மு.நா.ஆசிம் ராஜா, ஆர்.ஜெயசீலன், டி.தேசிங்கு, த.தங்கம்முரளி, டி.ராமகிருஷ்ணன், சே.பிரேம் ஆனந்த், ப.ச.கமலேஷ், தி.வை.ரவி, ஜி.ஆர்.திருமலை, தி.வே.முனுசாமி, ஜி.நாராயண பிரசாத், பேபி சேகர்,  பொன்.விஜயன், திருவேற்காடு நகர நிர்வாகிகள் எஸ்.பெஞ்சமின், வெ.குமாரசாமி, க.நடராஜன், அ.பானு, ஜெ.சரவணன், ஏ.இ.செல்வதுரை, ஜோதிநாதன், பி.பாண்டுரங்கன், இளைஞரணி நிர்வாகிகள் எஸ்.சங்கர், ராஜி, நாராயணன், நரேஷ், வட்ட செயலாளர்கள் பா.பரிசமுத்து, ரங்கதுரை, பி.உமாபதி, இளங்கோ, ஜெகன், கோபால், குருநாதன், காந்தி, பி.வி.கே.கண்ணன், பிரதானம், நடராஜ், தெய்வசிகாமணி, இளையராஜா, கே.பி.எஸ்.சுதாகர், பன்னீர்செல்வம், சாது, விநாயகம், சத்தியகிரி, சுடலைமணி, ராஜா மற்றும் அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.பிரபு கஜேந்திரன் நன்றி கூறினார்.

Tags : Udayanidhi Stalin ,MLA ,Minister ,Sahil b.k Nassar , Welfare assistance should be given to the poor on the occasion of Udayanidhi Stalin MLA's birthday: Minister S.M. Nasser Requests
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...