சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை: திருப்பூரில் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்குபாளையம் பகுதியில் சாலையோரம் நேற்று காலை பச்சிளங்குழந்தை இறந்து கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு 7 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது.

உடனே குழந்தையின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தாய் யார், எதற்காக வீசி சென்றார் என்று தெரியவில்லை. குறை பிரசவத்தில் இறந்து பிறந்ததால் வீசி சென்றாரா? அல்லது தகாத உறவு காரணமாக பிறந்ததால் வீசி சென்றாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: