×

போடிமெட்டு மலைச்சாலையில் 7 இடங்களில் திடீர் அருவிகள்

போடி: தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கிய சாலையாக போடி மெட்டுமலைச்சாலை உள்ளது. இப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், நேற்று மாலை போடிமெட்டு மலைச்சாலை 7வது கொண்டை ஊசி வளைவு, புலியூத்து பகுதி என 7க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர் அருவி போல கொட்டி வருகிறது. இதனால் ஏலத்தோட்டத்திற்கு 100க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப்கள் உட்பட ஏராளமான வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.

அதேபோல், 17வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சிறு நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்கள், பாறைகள் சரிந்து பாதையை மறைத்துள்ளது.  இதனால் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கு  வாய்ப்புள்ளது என்பதால், நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags : Podimetu Hill Road , Sudden waterfalls at 7 places on Podimetu Hill Road
× RELATED கனமழையால் பாறைகள், மரங்கள் சரிந்தன...