×

பாகிஸ்தானில் அதிர்ச்சி மருத்துவமனை கூரையில் 500 நிர்வாண சடலங்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையின் மேற்கூரையின் மீது 500க்கும் மேற்பட்ட உடல்கள் நிர்வாண நிலையில் குப்பைபோல் வீசப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில், முல்தான் நகரத்தில் நிஷ்தார் மருத்துவ பல்கலைக் கழக மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உடற்கூறு செய்யப்படும் மையத்தின் மேற்கூரையின் மேல்  500க்கும் மேற்பட்ட மனித உடல்கள், நிர்வாணமாக சிதைந்த நிலையில் குப்பைப்போல் வீசப்பட்டு கிடப்பதாக தகவல்கள் வெளியானது.

இவற்றில் பெரும்பாலான உடல்கள் உரிமை கோரப்படாதவை. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் மாகாண முதல்வரின் ஆலோசகர், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினர். பின்னர், இந்த உடல்களை முறைப்படி அகற்றும்படி  உத்தரவிட்டனர். இறந்தவர்களின் உடல்களை கூரையின் மேல் வீசிய மனிதாபிமானமற்ற செயலை செய்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


Tags : Pakistan , 500 naked corpses on trauma hospital roof in Pakistan
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா