×

எடியூரப்பா மீதான ஊழல் வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் விலகல்

புதுடெல்லி: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆட்சிக் காலத்தில், பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழல் தொடர்பாக பாஜ மூத்த தலைவர் எடியூரப்பா, அவரது மகனும், மாநில பாஜக துணைத் தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா, கூட்டுறவு அமைச்சரும் முன்னாள் பிடிஏ தலைவருமான எஸ்.டி.சோமசேகர், முன்னாள் பிடிஏ தலைவர் ஜி.சி.பிரகாஷ், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம் ஆகியோர் உள்பட 8 பேர் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த ஊழல் குற்றச்சாட்டின் கீழ் எடியூரப்பா மீதான வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, எடியூரப்பா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எடியூரப்பா உட்பட 10 பேர் மீது தொடரப்பட்ட லோக் ஆயுக்தா வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இருப்பினும், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகுவதாக தலைமை நீதிபதி யு.யு.லலித் நேற்று அறிவித்தார். விரைவில் ஓய்வு பெற உள்ளதால் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை புதிய அமர்வு விசாரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Yeddyurappa Supreme Court ,Chief Justice ,U.U. Lalit , Corruption case against Yeddyurappa Supreme Court Chief Justice U.U. Lalit quit
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...