×

அமெரிக்கா அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளை மீட்க அரசிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு; திருவாரூரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டவை

சென்னை: திருவாரூர் வேணுகோபால சுவாமி கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டு அமெரிக்கா அருங்காட்சியகத்தில் உள்ள 12ம் நூற்றாண்டை சேர்ந்த யோக நரசிம்மா, விநாயகர் சிலைகளை மீட்க அரசிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் ஆலத்தூர் வேணுகோபால சுவாமி கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு 12ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு, தேவி, பூதேவி சிலைகள் மாயமாகியதாக கடந்த 2017ம்  ஆண்டு பிப்ரவரி மாதம் மன்னார் குடி இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் நாகராஜன் என்பவர் விக்கிரபாண்டியன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் சிலைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாறியது. அதன்படி விசாரணை நடத்திய போது, திருடப்பட்ட 3 சிலைகளும் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‘லாக்மா’ என்ற அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு கோயிலில் உள்ள மீதமுள்ள சிலைகள் குறித்து ஆய்வு செய்த போது, யோகநரசிம்மா, விநாயகர், நடனம் கிருஷ்ணா, நடன சம்பந்தர், சோமாஸ்கந்தர், விஷ்ணு ஆகிய 6 சிலைகள் போலியானது என தெரியவந்தது.

பின்னர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடத்திய அதிரடி விசாரணையில், 12ம் நூற்றாண்டை சேர்ந்த யோகநரசிம்மா, விநாயகர் சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்தது தெரியவந்தது. இது பழங்கால புகைப்படங்களை வைத்து ஒப்பித்து அதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொல்லியல் துறை நிபுணர்கள் உதவியுடன் உறுதி செய்தனர். பிறகு அமெரிக்காவில் உள்ள 2 பழமையான சிலைகளை மீட்க அதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து அரசிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அளித்துள்ளது. அதைதொடர்ந்து யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் படி அமெரிக்காவில் உள்ள 2 சிலைகளும் விரைவில் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags : American Museum ,Tiruvarur , Submission of documents to government to recover statues in American Museum; Stolen 50 years ago in Tiruvarur
× RELATED கூட்டுறவு மேலாண்மை முழுநேர...