×

உக்ரைனின் 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்த விவகாரத்தில் ஐ.நா. சபையில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது. உக்ரைனில் மீண்டும் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், நேற்று முன்தினம் அடுத்தடுத்து 80-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

முன்னதாக போரில் உக்ரைனில் இருந்து ஆக்கிரமித்த டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள திட்டமிட்ட ரஷ்யா இது தொடர்பாக பொது வாக்கெடுப்பை மேற்கொண்டது. பிறகு அந்த போடு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறி ரஷ்யா 4 பிராந்தியங்களை தன்னுடை இணைத்துக்கொண்டது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலகநாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா இணைத்ததை கண்டித்து ஐநா சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டது. ரஷ்யாவை கண்டிக்கும் இந்த தீர்மானத்தின் மீதி இன்று வாக்கெடுப்பு நடக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

முன்னதாக இந்த தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று ஐநா சபையில் ரஷ்யா கோரிக்கை வைத்தது. அதன்படி, ரஷ்யாவின் இந்த கோரிக்கையை ஏற்பதா, வேண்டாமா என ஐநா சபையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது இந்தியா உள்பட 107 ஐநா உறுப்பு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தன. இதனால் ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.


Tags : Ukraine ,UN ,UN India ,Russia ,House , Ukraine, Russia, UN Assembly, India Voting
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...