×

முலாயம் உடல் தகனம்: ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி

சைபை: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வரான முலாயம் சிங்கின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. உத்தர பிரதேசத்தில் 3 முறை முதல்வராகவும், ஒன்றியத்தில் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் இருந்தவர் முலாயம் சிங் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர். இவர் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான சைபை எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று அவருடைய  உடலுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டது. அவருடைய உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக மேலா மைதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், முழு அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த இறுதிச் சடங்கில் காங்கிரஸ் சார்பில் சட்டீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் கலந்து கொண்டனர். திமுக சார்பில் டிஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினர். மேலும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களும் இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். கடந்த 2003ம் ஆண்டு முலாயம் சிங்கின் முதல் மனைவி மாலதி தேவி இறந்தார். அவருடைய சமாதிக்கு அருகிலேயே தகன மேடை உருவாக்கப்பட்டு, முலாயம் சிங் தகனம் செய்யப்பட்டார்.

Tags : Mulayam , Mulayam cremation: Thousands pay their last respects
× RELATED முலாயமின் குடும்பத்தினர் மீது பாஜவுக்கு அச்சம்: சிவபால் சிங் பேட்டி