×

தொன்மையான 92 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: தொன்மையான 92 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (11.10.2022) தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 42 வது வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது. சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,

விருதுநகர் மாவட்டம், சின்னவாடி, அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் திருக்கோயில், சிவகாசி, அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயில், சேலம் மாவட்டம், மேட்டூர், அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோயில், முதல் அக்ரஹாரம், அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, அருள்மிகு கனககிரி குமரவேல்சாமி திருக்கோயில், பவானி, அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம், கண்ணன்புதூர், அருள்மிகு முப்பிடாரி அம்மன் திருக்கோயில், அகத்தீஸ்வரம், அருள்மிகு பதினெட்டாம்படி இசக்கியம்மன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயில், தேனி மாவட்டம், போடிநகர்,

அருள்மிகு பரமசிவன் திருக்கோயில், ஆண்டிப்பட்டி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, அருள்மிகு திருமுருகன் திருக்கோயில், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, அருள்மிகு காலகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் உட்பட 92 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும்.

இக்கூட்டத்தில் திருப்பணி இணை ஆணையர் திரு.பொ.ஜெயராமன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர்கள் திரு.கோவிந்தராஜ பட்டர், திரு.கே.சந்திரசேகரபட்டர், திரு. ஆனந்த சயன பட்டாச்சாரியார், தலைமை பொறியாளர் (ஓய்வு) முதுநிலை ஆலோசகர் திரு.கே.முத்துசாமி, தலைமை பொறியாளர் ஸ்தபதி திரு.கே.தட்சிணாமூர்த்தி, தொல்லியல் துறை வல்லுநர்கள் முனைவர் கே.மூர்த்தீஸ்வரி, திருமதி சீ.வசந்தி, திரு.இராமமூர்த்தி, தொல்லியல் துறை  வடிவமைப்பாளர்  முனைவர் டி.சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் திரு.பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : State level expert committee approves to start restoration work on 92 ancient temples
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...