×

ஆழத்தின் ஆபத்தை உணராமல் வைகை அணை நீர்தேக்கத்தில் ‘செல்பி’ எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

*பொதுப்பணித்துறையினர், போலீசார் கண்காணிப்பு அவசியம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்கா பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நீர்தேக்கத்தில் இறங்கி ஆபத்தான இடத்தில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர். பொதுப்பணித்துறை பணியாளர்களும் போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த வைகை அணை 5 மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வைகை அணையில் அமைந்துள்ள பூங்கா மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. இந்த பூங்காவில் வலது கரை பூங்கா இடது கரை பூங்கா என பிரிக்கப்பட்டு பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் உள்ளது.

 இந்த பூங்கா பகுதிக்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் பூங்காவிற்கு விடுமுறை மட்டும் விஷேச நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். வைகை அ ணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. அணை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து காணப்படுவதால் அணையின் பிரமாண்டமான தோற்றத்தை ரசிக்க தினந்தோறும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நிரம்பி காணப்படும் அணையை நடந்து கொண்டே ரசிப்பதற்கு மதகு பகுதிக்கு மேலே நீண்ட தூரம் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பூங்காவை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவையும், அணையையும் சுற்றி பார்த்து ரசிப்பதுடன், ஆபத்தை உணராமல் அணையின் நீர்தேக்க பகுதியில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர். நீரை தேக்கி வைப்பதற்காக கட்டப்பட்ட அணையின் கற்கள் பகுதியில் குடும்பமாகவும், நண்பர்களுடனும் சேர்ந்து ஆபத்தான பகுதியில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை தடுப்பதற்கு பொதுப்பணித்துறை பணியாளர்களும் போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Waikai Dam Reservoir , Andipatti : Tourists coming to the Vaigai Dam Park area near Andipatti went down into the reservoir and stopped at a dangerous place to take selfies.
× RELATED டபுள் டெக்கர் பேருந்து சேவையை இன்று...