அர்னவ்வை திருமணம் செய்த பிறகு மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டேன்: திவ்யா பேச்சு

சென்னை: அர்னவ்வை திருமணம் செய்த பிறகு, தான் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டதாக, திவ்யா கூறியுள்ளார்.  சின்னத்திரை நடிகர் அர்னவ் தனது காதல் மனைவி திவ்யா மற்றும் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என நேற்று கூறினார்.  இந்நிலையில்,  சின்னத்திரை நடிகையான திவ்யா சக நடிகை மற்றும் தனது நண்பர்களுடன் சேர்ந்து, அவரது திருவேற்காடு வீட்டில் நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘நான் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு,  மன ரீதியாக மிகவும்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். அர்னவ் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று வாய் அளவு மட்டுமே கூறி வருகிறார். மனதளவில் அவர் கூறவில்லை. 45 நாட்கள் என்னுடன் பேசாமல் ஒரே வீட்டில் இருந்தார். இதனாலேயே நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் கருவை கலைக்க வேண்டும் என்றால், ஏன் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.

Related Stories: