சிகப்பு டீ சர்ட்டுடன் பைக்கில் பறக்கிறார் வீடு வீடாக சென்று டெலிவரி செய்யும் சொமெட்டோ சிஇஓ: ஒருவருக்கும் அடையாளம் தெரியலையாம்

புதுடெல்லி: வாடிக்கையாளர்களின் வீடு தேடி சென்று உணவு பொருட்களை சப்ளை செய்வதில், சொமெட்டோ நிறுவனம் முன்னணி வகிக்கிறது.  இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) தீபிந்தர் கோயல், சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த ‘10 நிமிடங்களில் டெலிவரி’ என்ற திட்டம் பெரும் சர்ச்சையானது. இதனால்,  விபத்துகள் நடப்பதாக  குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில், தீபிந்தர் கோயலும் சிகப்பு டீ சர்ட் அணிந்து, பைக்கில் ஓட்டல்களுக்கு சென்று வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த உணவை வாங்கிச் சென்று டெலிவரி செய்வதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

தனது வாடிக்கையாளர்கள், வர்த்தக கூட்டாளிகளின் மனநிலை,  தனது ஊழியர்களின் சிரமம் போன்றவற்றை நேரடியாக தெரிந்து கொள்வதற்காக இதை அவர் செய்கிறார். 3 மாதங்களுக்கு ஒருமுறை, இவரும், சோமெட்டோவின் முக்கிய பதவிகளி்ல் இருப்பவர்களும் இப்படி உணவு டெலிவரி செய்கிறார்கள். தீபிந்தர் கோயலின் இந்த டெலிவரி விஷயத்தை, இன்போ எட்ஜ் நிறுவனத்தின் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தானி, தனது டிவிட்டர் பதிவில் நேற்று வெளியிட்டுள்ளார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ‘உணவு பொருட்களை வாங்கும் இடத்திலும், டெலிவரி செய்யும் இடத்திலும் ஒருவர் கூட இதுவரை என்னை கண்டுபிடிக்கவில்லை. நான் யார் என்றே அவர்களுக்கு தெரியவில்லை,’ என்று தீபிந்தர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

Related Stories: