×

தீபாவளிக்கு புதிய காம்போ அறிமுகம்; அனைத்து தரப்பினரையும் வேட்டி அணிய வைப்பதே இலக்கு: ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர். நாகராஜன் பேட்டி

திருப்பூர்: தமிழர்களின் பாரம்பரியமான வேட்டி அணியும் பழக்கம்  மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில், அதற்கான கவுரவத்தை மீட்டெடுத்து,  வெளிநாட்டினரையும் வேட்டி கட்ட வைத்து பெருமைப்பட வைக்கும் நிலையை  உருவாக்கியுள்ளது திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனம். இந்நிறுவன தலைவர்  கே.ஆர்.நாகராஜன் கூறியதாவது: பாரம்பரிய உடையான வேட்டியை நாமே தயாரிக்க  வேண்டும் என்ற எண்ணத்தில் 1983ம் ஆண்டு வேட்டி உற்பத்தி தொழிலை  தொடங்கினேன். இதற்காக ₹1 லட்சம் முதலீடு செய்தேன். தற்போது வேட்டியில்  புது சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளோம். தற்போது இந்தியா முழுவதும்  எங்களுக்கு 10 ஆயிரம் டீலர்கள் இருக்கிறார்கள். 50 ஆயிரம் நெசவாளர்  குடும்பத்தினர் பயனடைந்து வருகிறார்கள்.

சட்டை, டீ-சர்ட், பேண்ட், கோர்ட், சர்ட்டிற்கு என தனியாக நெசவாளர்கள் இருக்கிறார்கள். நமது கலாச்சாரத்தை மீட்டெடுத்து, வேட்டி அணிகிறவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்துள்ளோம். இதற்கு காரணம் நாங்கள் வேட்டியை தரமாக கொடுத்து வருவதுதான். 2,500க்கும் மேற்பட்ட வகைகளை வேட்டியில் கொடுத்துள்ளோம். காலத்திற்கு ஏற்ப உற்பத்தியில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். ஒட்டிக்கோ, கட்டிக்கோ வேட்டி குழந்தைகளுக்கு வேட்டி கட்டும் பழக்கத்தை கொண்டு வந்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு அட்லாண்டாவில் அமெரிக்கா வாழ் தமிழ் சங்கத்தினர், பாரம்பரிய பாதுகாவலர் விருது வழங்கினர். அப்போது என்னை 1,500-க்கும் மேற்பட்டவர்கள் வேட்டி, சட்டை அணிந்து வரவேற்றனர். இது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

தீபாவளியையொட்டி புதிய காம்போ தயாரித்துள்ளோம். கல்விக்கு வெள்ளி சரிகை, செல்வத்திற்கு தங்கநிற  சரிகை, வீரத்திற்கு செம்பு நிற சரிகை என 3 வேட்டிகள் ஒரு காம்போவில் அடக்கியுள்ளோம். இந்த வேட்டிகளை வாங்கி அணிகிறவர்களுக்கு இந்த 3ம்  கிடைக்கும் என்பதை மையப்படுத்தியுள்ளோம். இந்த வேட்டிகளை கல்வி, செல்வம், வீரம் தொடர்பான அந்தந்த நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு அணிந்து  செல்லலாம். 4 முழம் வேட்டி  காம்போ ₹1,275க்கும், 8 முழம் வேட்டி ₹2,175க்கும் கிடைக்கும்.  புதிய காம்போ  வேட்டிகளுக்கு, மேட்சாக காட்டன் சர்டுகளும், லீனென் சர்டுகளும் உள்ளன. இதில் காட்டன் சட்டைகள் ₹1000க்கு கீழ் இருக்கும். லீனென் சட்டைகள் ₹2 ஆயிரத்திற்கு மேல் இருந்து கிடைக்கும்.

அனைவரும் இதனை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காட்டன் மற்றும் லீனெனை மிக்சிங் செய்து காட்டன், லீனென் சட்டை தயாரித்து ₹995க்கு விற்பனை செய்கிறோம். இதனை  தீபாவளி பண்டிகைக்கு விற்பனைக்கு கொண்டு வருகிறோம். கடந்த 40 ஆண்டுகளாக எங்களது நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து வேட்டியை வாங்கி அணிகிற வாடிக்கையாளர்களை மிகப்பெரிய விருதாக நினைக்கிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை நமது கலாச்சார உடையான வேட்டியை அணிய வைப்பதே எனது இலக்கு.  இதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். வேட்டி தொழில்  செய்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தி வருவது மகிழ்ச்சியாக  இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Diwali ,Ramraj Cotton ,K.R. Nagarajan , Introducing a new combo for Diwali; The goal is to get all parties involved: Ramraj Cotton founder K.R. Nagarajan interview
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...