×

தேவரப்பன்பட்டியில் 32 ஆண்டுக்கு பின் நிரம்பிய குளம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி: தேவரப்பன்பட்டியில் உள்ள கவுண்டர் குளம் 32 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பட்டிவீரன்பட்டி அருகே தேவரப்பன்பட்டியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் கவுண்டர் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு அய்யம்பாளையம் மருதாநதி அணை தெற்கு வாய்க்காலிருந்து வரும் தண்ணீர் நீர் ஆதாரமாகும். பல ஆண்டு காலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தினால், தெற்கு வாய்க்காலில் தண்ணீர் வரும் வாய்க்கால் தூர்ந்து போய் விட்டது. இதனால் குளத்திற்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் தேவரப்பன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தெற்கு வாய்க்காலை சரிசெய்து தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வாய்க்கால் சீரமைக்கப்பட்டு, தற்போது தெற்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இந்த தண்ணீர் மூலம் சுமார் 32 ஆண்டுகளுக்கு பின்பு தேவரப்பன்பட்டியில் உள்ள கவுண்டர்குளம் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர். முன்னதாக குளம் நிரம்பியதையடுத்து தேவரப்பன்பட்டி ஊராட்சி தலைவர் ரேவதி மாரிமுத்து, துணை தலைவர் பிரிதிவிராஜ், அய்யம்பாளையம் திமுக நகர செயலாளர் தங்கராஜ் ஆகியோர் குளத்திற்கு மலர் தூவினர்.

Tags : Devarappanpatti , Devarappanpatti pond filled after 32 years: Public happy
× RELATED வரத்து அதிகரிப்பால் குடோன்களில்...