×

உயிர்நீர் இயக்க திட்ட செயல்பாடுகளில் தமிழ்நாட்டிற்கு முதல் மாநிலத்திற்கான விருது; முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து

சென்னை: உயிர்நீர் இயக்க திட்ட செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாட்டிற்கு முதல் மாநிலத்திற்கான விருது மற்றும் தூய்மை இந்திய நகர்ப்புற இயக்கத்தின் கீழ் இராமேஸ்வரம் நகராட்சி மற்றும் போத்தனூர் பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட விருதுகளை முதலமைச்சர்  திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெறப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (6.10.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் சந்தித்து, உயிர்நீர் இயக்க (Jal Jeevan Mission) திட்டத்தின் கீழ் 60 சதவிகித குடிநீர் குழாய்கள் இணைப்புகளைக் கொண்ட மாநிலங்களில் சிறந்த செயல்பாட்டிற்காக இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட முதல் பரிசிற்கான விருது, தூய்மை இந்திய நகர்ப்புற இயக்கத்தின் (Swachh Bharat Mission) 2.0 பதிப்பின் கீழ் 50,000-க்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான நகரமாக இராமேஸ்வரம் நகராட்சி தேர்வு செய்யப்பட்டு அதற்காக ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட விருது.

தூய்மை இந்திய நகர்ப்புற இயக்கத்தின் 2.0 பதிப்பின் கீழ் 15,000 முதல் 25,000 மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான நகரமாக கோயம்புத்தூர் மாவட்டம், போத்தனூர் பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டு அதற்காக ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட விருது, ஆகிய மூன்று விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பேரூராட்சிகள் ஆணையர் டாக்டர் ஆர். செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.வி.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் திரு. பா. பொன்னையா, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Tamil ,Nadu ,Chief Minister ,MC K. Show ,Stalin , Awarded to Tamil Nadu as the first state in Bio-Water Project activities; Chief Minister M.K. Greetings to Stalin
× RELATED சென்னை விமான நிலையத்தில் புதிய பிளாசா...