×

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில் பிரைடல் நகை கண்காட்சி

 

சென்னை, ஜன.6: தி.நகரில் உள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில், பிரத்யேக பிரைடல் நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது. வரும் 11ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் சிறப்பு சலுகையாக தங்கம், வைரம், ஜெம்ஸ்டோன் மற்றும் அன்கட் நகைகளுக்கு சேதாரத்தில் 30% வரை தள்ளுபடி மற்றும் வைரத்தின் மதிப்பில் 30% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த சலுகை வரும் 18ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விழாவான பிரெய்ட்ஸ் ஆப் இந்தியா ராம்ப்வாக் நிகழ்ச்சி, தி.நகர் ஷோரூமில் கடந்த 2ம் தேதி நடந்தது.
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான “மைன்” பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட “எரா” மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான “எத்தினிக்” நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவைப்புகளில் உருவான “டிவைன்” ஆகியவை இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

Tags : Malabar Gold & Diamonds ,Chennai ,T. Nagar ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் புதிய பிளாசா...