×

நெமிலி, பனப்பாக்கம் பேரூராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் திடீர் ஆய்வு

நெமிலி : நெமிலி, பனப்பாக்கம் பேரூராட்சிகளில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா 2வது அலை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, நெமிலி பேரூராட்சியில் செயல் அலுவலர்  மனோகரன் தலைமையில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் பனப்பாக்கம் பேரூராட்சியில் செயல் அலுவலர் அர்ச்சுனன் தலைமையில்  அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில்  தொடர்ந்து ஒரு வாரமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் ஒரு வாரத்தில் மட்டும்  3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில், நேற்று பனப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை  கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார். அப்போது, விரைவில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால், முகாம்களை  மாற்று இடம்  செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டால்  உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். இதில், தாசில்தார் சுமதி,  புன்னை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மீனா, பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் அர்ச்சுனன், நெமிலி பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பிரவீன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதேபோல், நெமிலி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார். …

The post நெமிலி, பனப்பாக்கம் பேரூராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Collector ,Nemili ,Panapakkam ,Gladstone Pushparaj ,vaccination ,Ranipet ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டில் ஜமாபந்தி நிறைவு...