பந்தலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கி மீட்கப்பட்ட சிறுத்தை உயிரிழப்பு

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி அத்திச்சால் பகுதியில் உள்ள தனியார் காப்பித்தோட்டத்தில் கடந்த 2ம் தேதி 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று சுருக்கு கம்பியில் சிக்கி உயிருக்கு போராடியது. அதனை சேரம்பாடி வனத்துறையினர், கால்நடை மருத்துவர் உதவியுடன் மீட்டு கூண்டில் அடைத்து முதுமலை பகுதிக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அந்த சிறுத்தை சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்  உயிரிழந்தது. உடல் கூறாய்வுக்குப்பின் சிறுத்தையின் உடல் பொதுமக்கள் முன்னிலையில் எரியூட்டப்பட்டது.

Related Stories: