×

அக்.11ம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கும்; மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு வருகிற 11-ம் தேதி தொடங்கும் என மருத்துவ கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் எய்ம்ஸ்,  ஜிம்பர் உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகளில் அக்டோபர் 11ம் தேதி தொடங்கும் முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு இருபதாம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்குள் மாநிலங்களில் முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் மருத்துவ கலந்தாய்வு மூலம் கல்லூரிகளை தேர்வு செய்பவர்கள் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நவம்பர் இரண்டாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும்.

மாநிலங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 7ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் நவம்பர் 18ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர்க்கை பெற்று விட வேண்டும் என்றும் மாநிலங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் நவம்பர் 21ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : BTS , Medical consultation for MBBS, BDS courses will start from October 11; Medical Advisory Committee Notice
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் நீட்...