ஏழை மாணவிக்கு தேர்வு கட்டணம் செலுத்திய ஜி.வி.பிரகாஷ்

சென்னை: கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் கட்ட உதவியிருக்கிறார் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ். கும்பகோணத்தை சேர்ந்தவர் பிசிஏ மாணவி ஹேமப்பிரியா, இவர் சமூக வலைத்தளத்தில் தனக்கு தேர்வு நெருங்குவதாகவும் குடும்பத்தில் கஷ்டமான சூழல் நிலவுவதால் தேர்வுக்கான கட்டணம் செலுத்த முடியவில்லை என்றும் இதற்கு உதவும்படியும் ஜி.வி.பிரகாஷிடம் கோரிக்கை வைத்தார்.

இதை பார்த்த ஜி.வி.பிரகாஷ், அந்த மாணவியை பற்றி விசாரித்தார். பின்னர் அவருக்கு பணம் அனுப்பி, தேர்வு கட்டணம் செலுத்த உதவியிருக்கிறார். இதற்காக அந்த மாணவி நன்றி தெரிவித்துள்ளார். நடிப்பது, இசையமைப்பதுடன் சமூக பணிகளிலும் ஜி.வி.பிரகாஷ் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இதுபோன்ற உதவிகளை அவர் செய்து வருவதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் அவரை பாராட்டியுள்ளனர்.

Related Stories: