திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்

நாகர்கோவில்: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் ேகாட்ட செய்திகுறிப்பு: ரயில் எண் 06054 திருவனந்தபுரம் சென்ட்ரல்-தாம்பரம் சிறப்பு ரயில் வரும் 5ம் தேதி புதன்கிழமை பகல் 12 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து பறப்பட்டு 12.143க்கு குழித்துறை வந்து சேரும். 12.45க்கு புறப்பட்டு 14.10க்கு நாகர்கோவில் சந்திப்பு வரும், 14.20க்கு நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்பட்டு செல்லும்.

வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தை மறுகாள் காலை 6 மணிக்கு சென்றடையும்.

மறு மார்க்கத்தில் ரயில் எண் 06053 தாம்பரம் -திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் அக்டோபர் 6ம் தேதி வியாழக்கிழமை தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 5.38க்கு நாகர்கோவில் டவுன் வந்து சேரும். அங்கிருந்து 5.40க்கு புறப்பட்டு காலை 6.03க்கு குழித்துறை சென்று 6.05க்கு அங்கிருந்து புறப்பட்டு காலை 7.40க்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்றடையும்.

Related Stories: