ஐதராபாத்: சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜு மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து கோதாவரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம் ராஜுவின் சொந்த ஊரான மொகல்
தூரில் அவருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் பிரபாஸ், ஆந்திர அமைச்சரும் நடிகையுமான ரோஜா கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேருக்கு விருந்து வழங்கினார் பிரபாஸ். பிறகு ரசிகர்களிடையே அவர் பேசினார்.
கிருஷ்ணம் ராஜு பெயரில் அறக்கட்டளை தொடங்கு வதாகவும், இதன் மூலம் நலிந்தவர்களுக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவி அளிக்கப்படும் என்றும், அதற்கு முதற்கட்டமாக 3 கோடி ரூபாய் நிதி வழங்குவதாகவும் அறிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய ரோஜா, ஆந்திர முதல்வருடன் கலந்து பேசி, கிருஷ்ணம் ராஜு பிறந்த ஊரில் அவருக்கு நினைவு மண்டபம் கட்ட ஏற்பாடு செய்யப்போவதாகவும், அதற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும் அறிவித்தார். மறைந்த நடிகர் கிருஷ்ணம் ராஜு, பிரபாஸின் பெரியப்பா ஆவார்.