சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு..!!

சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.36 குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப, இந்தியாவில் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைப்பது போல், சிலிண்டர் விலையின் நிலவரத்தையும் மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான சிலிண்டர் விலை இன்று மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36 குறைந்துள்ளது. கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட  வணிக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.2,009க்கு விற்பனையாகிறது. ஆகஸ்ட் மாதத்தில் வணிக சிலிண்டர் விலை ரூ.2045 ஆக இருந்தது. அதேநேரத்தில், வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: