மனித குண்டு தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 19 மாணவர்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் மாணவர்கள் உள்ளிட்ட 19 பேர் பலியாகினர். ஆப்கானிதான் தலைநகர் காபூல் அருகே ஷியா பிரிவை சேர்ந்த ஹஜரா சமூகத்தினர் அதிகம் வசிக்கும் டாஷ்ட் இ பார்ச் பகுதியில், காஜ் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு பல்கலைக் கழக நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், இந்த கல்வி நிறுவனத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் பயிற்சி வகுப்பில் இருந்த மாணவ, மாணவிகள் 19 பேர் பலியாகினர். மேலும், 27 பேர் காயமடைந்தனர்.

சிறுபான்மையினரான ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தத் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனால், நேற்றயை தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Related Stories: