×

கோவை பாரதியார் பல்கலை.யில் புகுந்த 8 யானைகள் காட்டுக்குள் விரட்டியடிப்பு

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த 8 யானைகள் காட்டுக்குள் விரட்டி அடிக்கப்பட்டது. கோவை மருதமலை, பாரதியார் பல்கலைக்கழகம், தடாகம் உள்ளிட்ட பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. யானை நடமாட்டத்தை கண்காணிக்க இரவு முழுவதும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின் பகுதியில் உள்ள வனத்தில் இருந்து நேற்று மாலை வெளியேறிய குட்டியுடன் கூடிய 8 காட்டு யானைகள் கூட்டம், பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தன.

வழித்தவறி வந்த யானை கூட்டம் பல்கலைக்கழகத்திற்குள் அங்கும் இங்கும் சுற்றி வந்தது. இதனை கல்லூரி முடிந்து வீடு மற்றும் விடுதிக்கு திரும்பிய மாணவர்கள், பேராசிரியர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானை கூட்டத்தை மீண்டும் பல்கலைக்கழகத்தின் பின்புறம் பகுதியில் உள்ள வனத்திற்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து யானை கூட்டம் பல்கலை. வளாகத்தில் நுழையாமல் தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.Tags : Bhartiyar University ,Govai , 8 elephants entered Bharatiyar University in Coimbatore and chased them into the forest
× RELATED சென்னையில் 4வது நாளாக ரயில் சேவை மாற்றம்