×

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கான தடையை அமல்படுத்தி அரசாணை வெளியீடு: புதுச்சேரி அரசு

புதுச்சேரி: புதுச்சேரியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கான தடையை அமல்படுத்த அரசாணையை புதுச்சேரி அரசு வெளியீட்டுள்ளது. ஒன்றிய அரசின் உத்தரவை பின்பற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசாணை பிறப்பித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தது

இது தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போதும் பலர் கைது செயப்பட்ட நிலையில், சர்ச்சைக்குரிய பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனை தொடரந்து, பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக பல்வேறு மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. அந்த வகையில் மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் பிஎப்ஐ அமைப்புக்கு தடைவித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமான அரசாணையை நேற்று வெளியிட்டது. இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிஎப்ஐ அமைப்பை தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Tags : Popular Front of India ,Government of Puducherry , Promulgation of Ordinance enforcing ban on Popular Front of India Organization: Puducherry Govt
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...