முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

மும்பை: முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக இந்திய உளவுத்துறை சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், தற்போது இவருக்கு பாதுகாப்பு இசட் பிளஸ் வழங்கப்பட்டுள்ளது. இசட் பிளஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் அவருக்கு 58 கமண்டோ படையினர் பாதுகாப்பு வழங்குவார்கள். பாதுகாப்புக்காக செலவினங்களை முகேஷ் அம்பானி ஏற்பார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டருகே 20 ஜெலட்டின் குச்சிகளுடன் கார் நிறுத்தப் பட்டிருந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக உதவி போலீஸ் கமிஷனர் சச்சின் வாஷே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: