×

போலி பத்திரப்பதிவு ஒழிப்பு சட்டம் திராவிட மாடல் ஆட்சியின் இன்னொரு மைல் கல்: வைகோ பாராட்டு

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நில அபகரிப்பு செய்து, போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது குறித்து மாவட்ட பதிவாளர்களால் புகார் மனு பெறப்படும் பட்சத்தில், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை விசாரித்து, பதிவு செய்யப்பட்ட பத்திரம் போலியானது என்று கண்டறிந்தால், அதை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. போலி பத்திர பதிவால் பாதிக்கப்பட்டவர்களின் பதிவு ரத்து செய்யப்பட்டதற்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்  உரிமையாளர்களிடம் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இச்சட்டத்தின் மூலம் போலி பத்திரப்பதிவை அறவே ஒழிக்க நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரத்தில் இது இன்னொரு மைல் கல் ஆகும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Vaiko Praises , Fake Deed Suppression Act Another Milestone of Dravida Model Governance: Vaiko Praises
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...