ஒகேனக்கல்லில் நீர்வரத்து 9,500 கனஅடியாக சரிவு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து 14,000 கனஅடியாக நீடித்த நிலையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 9,500 கனஅடியாக சரிந்துள்ளது. பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அருவியில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 11,700 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 12,144 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 12,303 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், நேற்று 118.70 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 118.76 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 91.50 டிஎம்சியாக உள்ளது.

Related Stories: