×

அய்யலூர் வனப்பகுதியில் ரூ.15 கோடியில் தேவாங்கு சரணாலயம்-கலெக்டர் நேரில் ஆய்வு

வடமதுரை : அய்யலூர் வனப்பகுதியில் தேவா ங்கு சரணாலயம் அமையும் இடத்தை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.அய்யலூரை அடுத்துள்ள தொப்பையா சுவாமி மலை, தண்ணீர் கரடு, முடிமலை உள்ளிட்ட பகுதிகளில் தேவாங்குகள் அதிக அளவில் உள்ளன. இவை வனப்பகுதியை விட்டு வெளியே வரும் சமயங்களில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் வேலியில் சிக்கி ஒரு தேவாங்கு உயிரிழந்தது.

 மேலும் ஒரு தேவாங்கு காயம் அடைந்தது. இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க சரணாலயம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனிடையே, இந்தியாவின் முதல் தேவாங்கு வன உயிரின சரணாலயம் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வனப்பகுதியில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வனத்துறை மானிய கோரிக்கைகளின் போது அறிவித்திருந்தார்.

இதையடுத்து அய்யலூர் அருகே உள்ள பூனைக்கரடு வனப்பகுதியில் தேவாங்கு வன சரணாலயம் அமைக்கப்பட உள்ள இடத்தை கலெக்டர் விசாகன் நேற்று பார்வையிட்டார். பூனைகரடு என்ற பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.15 கோடி மதிப்பில் சரணாலயம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதில் மாவட்ட வன அலுவலர் பிரபு, அய்யலூர் வன அலுவலர் குமரேசன், அய்யலூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாண்டீஸ்வரி, அய்யலூர் பேரூராட்சி தலைவர் கருப்பன், சுக்காம்பட்டி ஊராட்சி தலைவர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். தே ர்வு செய்யப்பட்ட இடம் குறித்த அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி வை க்கப்படும் என்றும் அரசின் உத்தரவு கிடைக்கும் போது சரணாலயம் அமைக்கும் பணி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Devangu Sancture ,Ayalur , Vadamadurai: Yesterday, the Collector inspected the site of Devanga sanctuary in Ayyallur forest area.
× RELATED ஒட்டன்சத்திரம் அய்யலூர் சந்தைகளில் ₹4 கோடிக்கு ஆடுகள் விற்பனை