ராமாயணம் தழுவல் என்பதால் அயோத்தியில் பிரபாஸ் பட டீசர் வெளியாகிறது

லக்னோ: பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா அயோத்தியில் நடைபெற உள்ளது. தனாஜி என்ற இந்தி படத்தை இயக்கியவர் ஓம்ராவத். அந்த படத்தில் அஜய் தேவ்கன், சைப் அலிகான், கஜோல் நடித்திருந்தனர். படம் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் ஓம்ராவத் தனது அடுத்த படமாக ஆதிபுருஷ் படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி சனோன் ஹீரோயின். சைப் அலிகான், வத்சல் ஷெத், சன்னி சிங் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படம் ராமாயணம் புராணத்தின் தழுவலாகும். இதில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார்.

சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் நடிக்கிறார்கள். ராமாயணம் கதை என்பதால் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர் பூஷன்குமார் விரும்பினார். இதையடுத்து வரும் அக்டோபர் 2ம் தேதி இந்த படத்தின் பிரமாண்ட விழா அயோத்தியில் நடைபெற உள்ளது. இதில் பிரபாஸ் உள்பட படக்குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி திரைக்கு வருகிறது.

Related Stories: