×

7.5 சதவீத உள் ஒதுக்கீடு முதலாம் ஆண்டு தேர்வில் 75% தேர்ச்சி

சென்னை: அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் 2020ம் ஆண்டில் 433, 2021ம் ஆண்டில் 554 பேருக்கு இடங்கள் கிடைத்தன. இந்நிலையில், எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இந்த தேர்வில் அரசு பள்ளியில் படித்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து முதலாம் ஆண்டு தேர்வை எழுதிய 75 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், மீதமுள்ள மாணவர்களில் 85 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து இருப்பதாகவும் மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Tags : 7.5% internal quota with 75% pass in first year examination
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...