×

இத்தாலியில் முதல் பெண் பிரதமராகிறார் ஜார்ஜியா மெலோனி: 2 நாடாளுமன்ற அவைகளிலும் பெரும்பான்மை பலம் பெற்றது வலதுசாரிக் கூட்டணி

ரோம் : இத்தாலியில் நடைபெற்ற பொது தேர்தலில் வலதுசாரி தலைவரான ஜார்ஜியா மெலோனியின் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து அந்நாட்டின் முதல் பெண் பிரதமாக 45 வயதாகும் மெலோனி பதவி ஏற்க இருக்கிறார். இத்தாலியில் கூட்டணி கட்சிகளில் ஆதரவோடு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமராக நியமிக்கப்பட்ட மரியோ டிராகி கடும் பொருளாதார நெருக்கடி எதிரொலியாக கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார்.

இதனை தொடர்ந்து இத்தாலியில் பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு 600 உறுப்பினர்களை கொண்ட இத்தாலி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நேற்று வாக்கு பதிவு நடைபெற்றது. நாடு முழுவதுமாக அமைக்கப்பட்டிருந்த 60 ஆயிரம் வாக்கு சாவடியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்தனர். மாலை வாக்கு பதிவு நிறைவுற்றதும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சி தலைவர் ஜார்ஜியா மெலோனியின் வலதுசாரி கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது.

இத்தாலி நாடாளுமன்றத்தின் பிரநிதிகள் சபை மற்றும் சேனன் சபைக்கு தேர்தலில் மெலோனியின் பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சி சுமார் 27 விழுக்காடு வாக்குகளை பெற்று இருக்கிறது. அவரது வலதுசாரி கூட்டணி மொத்தம் 44 சதவீத ஆதரவை பெற்றது. 2 வது இடத்தை என்ட்ரிகோ லிட்டா தலைமையிலான இடதுசாரி கட்சி கூட்டணி பிடித்துள்ளது. பெரும்பான்மை இடத்தை பிடித்திருப்பதை அடுத்து ஜார்ஜியா மெலோனி இத்தாலியின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இத்தாலிய அரசியல் சட்டத்தின்படி நாட்டின் அதிபரை பிரதமரே தேர்வு செய்வார் என்பதால் முறையான அறிவிப்பு வெளியாக ஒரு சில நாட்களாகலாம்.             


Tags : Giorgia Meloni ,Italy , Italy, First, Female, Prime Minister, Georgia Meloni, Majority, Strength, Right-Wing, Coalition
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்