×

சண்டிகரில் உள்ள விமான நிலையத்துக்கு பகத் சிங்கின் பெயர்: பிரதமர் அறிவிப்பு

புதுடெல்லி: ‘சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட தியாகி பகத் சிங்கின் பெயர் சூட்டப்படும்,’ என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி வார ஞாயிற்றுக்கிழமையில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பேசி வருகிறார். அதன்படி, நேற்று அவர் ஆற்றிய உரையில் வருமாறு: பருவநிலை மாற்றங்கள், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடற்கரைகளில் குப்பைகள் இருப்பது கவலை அளிக்கிறது. இந்த சவால்களை சமாளிக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வது நமது பொறுப்பாகும். பாஜ.வின் சித்தாந்தவாதியான தீன் தயாள் உபாத்யாயா, சிறந்த ஆழ்ந்த சிந்தனையாளர்.

நாட்டின் சிறந்த குடிமகன். ‘அமிர்த  மஹோத்சவ்’ கொண்டாட்டத்தின் ஒரு முக்கியமான நாளாக செப். 28ம் தேதி பகத் சிங்கின் பிறந்தநாள் வருகிறது.
இதை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் வகையில், பஞ்சாப்பில் உள்ள சண்டிகர் விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட தியாகி பகத்  சிங்கின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பஞ்சாப் அரசு நன்றி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இறுதியாக, எங்களின் நீண்ட கால முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத் சிங்கின் பெயரை சூட்டும் பிரதமர் மோடிக்கு,  பஞ்சாபின் ஒட்டு மொத்த மக்களின் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்,’ என கூறியுள்ளார்.

Tags : Chandigarh ,Bhagat Singh ,PM , Airport in Chandigarh named after Bhagat Singh: PM announcement
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்