வத்திராயிருப்பு அருகே தோட்டத்தில் பதுக்கிவைக்கப்பட்ட 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கான்சாபுரத்தை அடுத்த அத்திகோயில் செம்பட்டையான் காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (22). அய்யனார்புரத்தை சேர்ந்தவர்கள் டேனியல் ராஜ்குமார் (22), தேவாஜ் (25). இவர்கள் மூவரும் கான்சாபுரம் மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கிவைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  கூமாப்பட்டி போலீசார் சென்று சோதனை நடத்தினர். அங்கு பதுக்கிவைக்கப்பட்டு இருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக 6 நாட்டு வெடிகுண்டுகள் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டு பதுக்கிய இடத்தை போலீசார் தேடி வருகின்றனர். காட்டுப்பன்றிகளை வேட்டையாடத்தான் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டதா, வேறு எதற்கும் பதுக்கி வைத்திருந்தார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: