×

கடைசி போட்டியில் தோல்வி: கண்ணீருடன் விடைபெற்றார் ரோஜர் பெடரர்

லண்டன்: அனைத்து விதமான டென்னிஸ் போட்டியில் இருந்து சுவிஸ் நாட்டு வீரர் ரோஜர் பெடரர் விடை பெற்றார். லண்டனில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோதின. உலக அணியில் இடம்பெற்றுள்ள ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ - ஜாக் சாக் இணையுடன் மோதினார். இந்த போட்டியில் ரோஜர் பெடரர்- ரபேல் நடால் இணை 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் டியாபோ - ஜாக்சாக் இணையிடம் தோல்வியைத் தழுவியது.

லேவர் கோப்பை டென்னிஸ் தொடர், தனது கடைசி போட்டி என ரோஜர் பெடரர் அறிவித்திருந்தார். தனது கடைசி போட்டியில் தோல்வியுடன் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் ரோஜர் பெடரர். 20 கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோஜர் பெடரர் கடைசி போட்டியில் தோல்வியடைந்து டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார். கடைசி போட்டி என்பதால் கண்ணீருடன் விடைபெற்றார். இது குறித்து பேசிய ரோஜர் பெடரர்; எனக்கு எந்த வருத்தமும் இல்லை.  இது ஒரு அற்புதமான நாள்; மகிழ்ச்சியோடு விடைபெறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Roger Federer , Final match loss: Roger Federer bids a tearful farewell
× RELATED ரோஜர் பெடரர் ஓய்வு