சித்தூர் கொங்காரெட்டிப்பள்ளியில் அண்ணா கேன்டீன் திறப்பு விழா-எம்எல்சி பங்கேற்பு

சித்தூர் : சித்தூர் கொங்காரெட்டிப்பள்ளியில் நேற்று நடந்த அண்ணா கேன்டீன் திறப்பு விழாவில் எம்எல்சி துரைபாபு பங்கேற்றார். சித்தூர் கொங்காரெட்டிப்பள்ளி பகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் அண்ணா கேன்டீன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. எம்எல்சி துரைபாபு தலைமை தாங்கி கேன்டீனை திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் சந்திரபாபு கடந்த 2014ம் ஆண்டு ஆந்திர மாநிலம் பிரிவினை தொடர்ந்து மாநில முதல்வராக பதவியேற்றார். பதவியேற்ற உடன் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அண்ணா உணவகத்தை திறந்து வைத்தார். ₹5க்கு மதிய உணவு வழங்கினார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல்வராக ெஜகன்மோகன் பதவியேற்றார். அவர் பதவியேற்ற உடன் அண்ணா கேன்டீனை மூடினார்.  கடந்த மாதம் மாஜி முதல்வர் சந்திரபாபு குப்பம் சட்டமன்ற தொகுதியில் அண்ணா கேன்டீனை திறக்க சென்றபோது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவுடிகள் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால், அண்ணா கேன்டீனை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

 சித்தூர் மாநகரத்தில் அண்ணா கேன்டீன் இருக்கும் மையத்தை தற்போது வார்டு செயலாளர் அலுவலகமாக ஆளும் கட்சியினர் மாற்றினர். எனவே, தெலுங்கு தேசம் கட்சி சார்பில் புதிதாக அண்ணா கேன்டீன் திறந்து வைத்தோம்.

நாள்தோறும் மத்திய உணவாக சாப்பாடு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். நாள்தோறும் கூலித்தொழிலாளர்கள் கேன்டீனில் இலவசமாக மதிய உணவு சாப்பிட வேண்டும் என்றார்.

இதில் மாநகராட்சி முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா, மண்டல தலைவர் மோகன்ராஜ், முஸ்லிம் மைனாரிட்டி தலைவர் ஜெகங்கீர் உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர்.

Related Stories: